இன்று நாடு முழுவதும் ஆயுத பூஜை வெகு விமர்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்காளம் மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் ராணுவ வீரர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடினார்.
இன்று டர்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், அங்கிருந்த ராணுவ தளவாடங்களுக்கு பூஜையையும் மேற்கொண்டார்.
அதன்பின் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராஜ்நாத் சிங், ""இந்தோ-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் முடிவுக்கு வர வேண்டும், அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. நமது நிலத்தை ஒரு அங்குலம்கூட மற்றவர்கள் ஆக்கிரமிக்க நமது ராணுவம் அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன்"என்றார்.