இரண்டாம் உலகப் போரில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே மோதிக்கொண்டன. இதில் ரஷ்யாவும், ஜெர்மனியும் இரு வேறு துருவங்களாக நின்று பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
அப்போது ரஷ்யா மீது ஜெர்மன் தொடர்ச்சியாக குண்டுகளை வீசியது. எனினும் இறுதியில் ரஷ்யா போரில் வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் 75ஆம் ஆண்டு விழா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கிறது.
இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார். இதையடுத்து இன்று (22-06-20) அவர் மாஸ்கோ புறப்பட்டார். அங்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அதன்பின்னர், வெள்ளிக்கிழமை (ஜூன் 24) அன்று சிவப்பு (ரெட்) சதுக்கத்தில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கிறார்.