தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் ஆலோசனை - கரோனா பரவல்: முப்படை உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சந்திப்பு

டெல்லி: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ராணுத்தின் தயார் நிலை குறித்துக் கேட்டறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ராஜ்நாத்
ராஜ்நாத்

By

Published : May 1, 2020, 2:05 PM IST

Updated : May 1, 2020, 2:22 PM IST

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 ஆக உயர்ந்துள்ளது. தொற்று காரணமாக இதுவரை 1,147 பேர் உயிரிழந்துள்ளனர். பல ராணுவ வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பெருந்தொற்றைச் சமாளிக்கும் அளவுக்கு ராணுவம் தயாராக இருக்கிறதா என்பது குறித்துக் கேட்டறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், விமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, ராணுவத் தளபதி நரவானே ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாதுகாப்புச் செயலர் அஜய் குமார், டி. ஆர். டி. ஓ. தலைவர் சதீஷ் ரெட்டி, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள் பலரும் இதில் பங்கேற்றனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களிடையே வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: கோவிட் - 19: மியான்மருக்கு உதவும் இந்தியா

Last Updated : May 1, 2020, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details