தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’ஃபிரான்ஸுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள காத்திருக்கிறோம்’ - ரஃபேல் விமான ஊழல்

டெல்லி: ஃபிரான்ஸுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Rajnath singh

By

Published : Oct 7, 2019, 2:26 PM IST

அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா ஃபிரான்ஸுடன் 2016ஆம் ஆண்டு ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்களை ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா வாங்கியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க ஃபிரான்ஸ் முடிவுசெய்தது.

அதன்படி, புதிய ரஃபேல் விமானங்களை பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஃபிரான்ஸ் நாட்டுக்குப் புறப்பட்டார். விஜயதசமியான நாளை சிறப்பு ஆயுத பூஜைகளை நடத்தி புதிய ரஃபேல் போர் விமானங்களை ராஜ்நாத் சிங் பெறவுள்ளார்.

இப்பயணம் குறித்து முன்னதாகப் பேசிய ராஜ்நாத் சிங், “மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஃபிரான்ஸ் செல்கிறேன். அங்கு புதிய ரஃபேல் விமானங்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளேன். இந்தியா - ஃபிரான்ஸ் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட உறவால் மிகப்பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஃபிரான்ஸிடம் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details