தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’மகாத்மா காந்தி பாஜகவின் வழிகாட்டி’ - பிரக்யாவிற்கு எடுத்துரைத்த ராஜ்நாத் சிங்! - pragya singh thakur

டெல்லி: நாடாளுமன்றத்தில் கோட்சேவை தேச பக்தர் என்று பாஜக உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாத்மா காந்தி பாஜகவின் வழிகாட்டி என்றும் கூறியுள்ளார்.

Rajnath Singh Says Gandhi is an idol for us
Rajnath Singh Says Gandhi is an idol for us

By

Published : Nov 28, 2019, 2:39 PM IST

மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியானார். இவர், ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காந்தியை படுகொலை செய்த கோட்சே தேசபக்தர் என்று கூறியிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்திலும் அதையே மீண்டும் கூறினார்.

சிறப்பு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீதான விவாதத்தின்போது திமுக எம்.பி. ஆ. ராசா, ”கோட்சே வன்மத்தோடு காந்தியை கொன்றதாக கூறினார் என்று பேச ஆரம்பித்த உடன் அவரை இடைமறித்த பிரக்யா, ”கோட்சே ஒரு தேசபக்தியாளர்; எனவே அவரைப் பற்றி இப்படி பேசுவது தவறு” என்று சர்ச்சைக்குரிய முறையில் கூறினார்.

அவரின் பேச்சுக்கு மற்ற கட்சி உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், பாஜக உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்து, இனி இவ்வாறு பேசக்கூடாது என்று எச்சரித்திருந்தனர். இந்த நிலையில், பிரக்யாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்(நவ.21 -வியாழன்) பாதுகாப்பு தொடர்பான நிலைக் குழுவில் உறுப்பினராக பிரக்யா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சரியாக ஒரே வாரத்தில் நிலைக்குழுவிலிருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தியாளர் என்று கூறுவதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. மகாத்மா காந்தி எங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இனியும் இருப்பார்” என்றார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் சூனியம்? பிரக்யாவின் சர்ச்சை பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details