இந்தியா உட்பட பல நாடுகள் பங்கேற்ற இரண்டாம் உலக போரில் சோவியத் யூனியன் ஜெர்மனியை வெற்றி கொண்டது. அந்த வெற்றியை ரஷ்யா ஒவ்வொரு ஆண்டும் மே 9ஆம் தேதி வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது.
ரஷ்யாவில் இந்தாண்டு நடைபெறவிருந்த இதன் 75ஆவது விழா கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டின் வெற்றி விழா ஜூன் 24 அன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக அந்நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ரஷ்யாவிற்கு மூன்று நாள் பயணமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.
அப்போது மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் சென்ற ராஜ்நாத் சிங், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உட்பட சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்கி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். மேலும் அந்நாட்டு அணிவகுப்பில் இந்தியா, சீனா உட்பட 11 நாடுகளின் வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்தியா சீனாவிற்கு இடையே நிலவிவரும் எல்லை பதற்ற சூழ்நிலையில், ரஷ்யாவில் இந்தியவின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று ராஜ்நாத் சிங் தன் பயணத்திற்கு முன்பு ட்வீட் செய்திருந்தார்.
இதையும் படிங்க:'அதிருப்தி அளிக்கிறது' - ட்ரம்ப்பின் விசா கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை