மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் தொகுதியான லக்னோவுக்கு நேற்று சென்றார். அப்போது அவர் பேசுகையில், "சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைந்த பிறகு உத்தரப் பிரதேசத்தில் பாஜக 10-15 தொகுதிகள் மட்டுமே வெற்றிபெற முடியும் என எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர்கள் கூறினார்கள். ஆனால் ஆட்சியில் ஐந்தாண்டுகள் இருந்த பிறகும் பாஜகவுக்கு ஆதரவு வாக்குகள் மட்டுமே இருந்தது. பாஜகவின் வாக்கு வங்கி அதிகமானது.
உ.பி.இல் பெற்றவெற்றி பிரமாண்டமானது! ராஜ்நாத் சிங் - ராஜ்நாத் சிங்
லக்னோ: 2014ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் வெற்றிபெற்றதுபோல் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என நினைக்கவில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Rajnath Singh
நம் பாதுகாப்புப் படையினர் பாலகோட் போல் பல துல்லியத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் மூலம் இந்தியா மிக வலிமையான நாடு என்பதை உலகுக்கு தெரிவித்துள்ளோம்" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக 64 தொகுதிகளை வென்று பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.