தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘பயங்கரவாதத்தை சிறப்பாக எதிர்கொள்ளும் அமெரிக்கா’ - ராஜ்நாத் சிங் பாராட்டு! - Updates on defense ministry India

அமெரிக்கா இந்தியாவின் நம்பிக்கையைப் பெற்ற நாடு என்றும், அமெரிக்க அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் பாராட்டுதலுக்குரியது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Rajnath Singh

By

Published : Oct 12, 2019, 9:46 AM IST

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க நாடு இந்தியாவின் முக்கியத்துவமும், நம்பிக்கையும் வாய்ந்த நட்பு நாடு என்றும், தீவிரவாதத்தை அது எதிர்கொள்ளும்விதம் பாராட்டுதலுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அரசு பயங்கரவாதத்தைக் கையாளும் விதத்தைப் பாராட்டிய அவர், உலக அளவிலான அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்திய அரசு கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். உலகின் பழமையான குடியரசுகளில் ஒன்றான இந்தியாவின் நம்பிக்கைவாய்ந்த அமெரிக்க அரசுடன் கைக்கோர்த்தது குறித்து கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு கடந்த ஐந்து வருடங்களில் நன்கு மேம்பட்டு இருப்பதாகவும், வரும் வருடங்களில் இந்த உறவு மேலும் பலப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்தியா - அமெரிக்கா நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் இருதரப்பு கலந்தாய்வு திருப்திகரமானதாக அமைந்ததாக ராஜ்நாத் சிங் கூறியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details