பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லே எல்லைக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், அங்கு வீரர்களின் தயார் நிலைக் குறித்து ஆய்வு செய்தார். வீரர்களின் துப்பாக்கியைக் கையில் வாங்கி அதன் செயல்பாடுகளை கேட்டறிந்த அமைச்சர், அவர்களின் பயிற்சி முறைகளையும் பார்வையிட்டார்.
இந்த பயணத்தைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதிக்கு நாளை (ஜூலை 18) பயணம் செய்கிறார். கடந்த சில மாதங்களாகவே எல்லைப் பகுதியில் சலசலப்பு நிலவிவரும் நிலையில் அமைச்சரின் தற்போதைய பயணம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. லடாக்கின் லே எல்லைப் பகுதியில் சீனா கடந்த மாதம் அத்துமீறல் மேற்கொண்டதை அடுத்து அங்கு மோதல் வெடித்தது. பின்னர் அது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.