சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்தியாவின் பெரிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பலர் சிக்கினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த வழக்கில் சிக்கி கைதானதை தொடர்ந்து அக்கட்சிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் பரிந்துரையின்படி இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு! - முன்னாள் கொல்கத்தா காவல் ஆய்வாளர் ராஜீவ் குமார்
டெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கிய கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்போது கொல்கத்தா காவல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் வழக்கு குறித்து தகவல்களை சிபிஐயிடம் தெரிவிக்க மறுப்பதாகவும், சரியான ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த சிபிஐ கொல்கத்தா நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் இவரை கைது செய்ய தொடர்ந்து நீதிமன்றம் தடை விதித்து வந்தது.
இந்நிலையில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய ஜூலை 22ஆம் தேதி வரை தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.