ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள எழுவரையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியிருந்தது. அதனை தமிழ்நாடு அரசு, ஆளுநராகவுள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், இதுநாள் வரையில் அவர் அந்த தீர்மானத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுத்தார், இவ்வளவு காலம் அந்த தீர்மானத்தின் மீது பதில் சொல்வதில் என்ன தாமதம் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் முன்பு விசாரணைக்கு வந்தது.