நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, சுமார் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில் இரண்டாவது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த வராணராசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசிக்கு பயணம் செய்துள்ளார். வாரணாசி சென்றுள்ள மோடி காசிநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும், 17ஆவது மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. வருகின்ற 30ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.