தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை ஊழியர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து - Rajinikanth Had Special Message

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை ஊழியர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

By

Published : Jan 1, 2021, 4:21 PM IST

ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக டிசம்பர் 25ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்நிலையில், ஒருவாரம் ஓய்வில் இருக்கவேண்டும், மன அழுத்தம் தரக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது, கரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை அமையும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவமனை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 27ஆம் தேதி மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இறைவனின் அருளால் உடல்நலத்தோடு, மன அமைதியாக இருக்கிறேன். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் என்னை நன்றாக பார்த்துக்கொண்டீர்கள். அனைவரும் அருமையான ஊழியர்கள். தொடர்ந்து இதுபோன்று பணிசெய்ய வேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி வீட்டு முன்பு ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

ABOUT THE AUTHOR

...view details