தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’அரசியலுக்கே வரப்போவதில்லை என ரஜினி இன்னும் கூறவில்லை’ - ரஜினி ரசிகர்கள்

தான் அரசியலுக்கே வரப்போவதில்லை என்றோ, மக்கள் மன்றத்தை கலைக்கப் போகிறேன் என்றோ ரஜினி இன்னும் அறிவிக்கவில்லை என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

manian
manian

By

Published : Feb 2, 2021, 5:12 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் காந்திய மக்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற என்னை தொடர்பு கொள்கின்றனர். நீங்கள் அனைவரும் ரஜினிக்காக எதையும் இழக்க துணிந்த ரசிகர்கள் என்பதை நேரில் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். பாழ்பட்டை அரசியலை பழுது பார்க்க புறப்பட்ட ரஜினியின் அரசியல் நகர்வு இன்னும் முடிந்துவிடவில்லை. தான் எப்போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என அவர் கூறவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை.

இந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை சிலர் செய்துவருவதை நான் வெறுக்கிறேன். மறந்தும் அத்தகைய செயலில் நான் ஈடுபட மாட்டேன். காந்திய மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாக தொடர்ந்து பயணிக்கும். பலரது வேண்டுகோளையும் ஏற்று மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் பணியில் தொடர்ந்து பயணிப்பேன். ரஜினி அரசியலுக்கு வந்தாலும், இல்லை என்றாலும் அவரை நெஞ்சில் ஏந்தியிருக்கும் எந்த உண்மையான மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details