சோழ மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனை பற்றி வட இந்தியர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் ஆகும். அவரது வரலாற்றை வட இந்திய மக்களும் தெரிந்து கொள்ளவேண்டும். அதன்பொருட்டு இன்று இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியும், சில எப்.எம்களிலும் ராஜேந்திர சோழனின் வரலாறு வடஇந்திய மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் டெல்லியில் உள்ள ஒரு கல்லூரிக்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்ட வேண்டும். டெல்லியில் அவரது சிலையை நிறுவ வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.
ராஜேந்திர சோழனுக்கு டெல்லியில் சிலை அமைக்க வேண்டும் - தருண் விஜய் - build a statue in Delhi
டெல்லி: ராஜேந்திர சோழனின் சிலையை டெல்லியில் அமைக்க வேண்டும் என பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
![ராஜேந்திர சோழனுக்கு டெல்லியில் சிலை அமைக்க வேண்டும் - தருண் விஜய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4499739-thumbnail-3x2-uy.jpg)
பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய்
இதைத் தொடர்ந்து சிவபெருமானிடம் ராஜேந்திர சோழன் ஆசிர்வாதம் வாங்குவதை போல உள்ள சிலையின் புகைப்படத்தை தனது ட்விட்டர் அவர் பதிவிட்டு, மிகப்பெரிய கடற்படை வீரரான ரஜேந்திர சோழன் தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதுபோல் எந்த ஒரு சிலையையும் அமைத்துக் கொள்ளவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.