கரோனா ஊரடங்கால் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சிக்கியிருந்த மாணவர்களை அழைத்துவர உத்தரப் பிரதேச அரசு பல பேருந்துகளை இயக்கியது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், மீதமுள்ள மாணவர்களை அனுப்ப ராஜஸ்தான் அரசு பேருந்துகளை இயக்கியது.
அதற்காக 36 லட்சம் ரூபாயை ராஜஸ்தான் செலவழித்துள்ளதாகவும் அதனைச் செலுத்துமாறும் உ.பி., அரசிடம் ராஜஸ்தான் அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு தொகையை செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், 19 லட்சம் ரூபாய் மட்டுமே உ.பி., அரசால் செலுத்தப்பட்டுள்ளது என ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது.