ராஜஸ்தான்:நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்ததையொட்டி இறுதி நாளில் துர்க்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தோல்பூர் நகரில் உள்ள பார்வதி ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். முன்னதாக, ஒரு சிறுவன் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அவர் நீரில் மூழ்கியதால் மற்றவர்கள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களும் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.