குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளர்களின் வேலை நேரத்தை இந்திய தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் படி திருத்தி அமைத்தது. அதன்படி, 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றியமைத்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளர்களின் கூடுதல் வேலை நேரங்கள் கணக்கில் கொள்ளப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு வேலை நேரம் 12 மணி நேரமாக அமலில் இருக்கும் என ஏப்ரல் 24இல் அறிவித்திருந்தது. கரோனாவின் நெருக்கடியை கட்டுப்படுத்த ’குறைந்த தொழிலாளர்கள்- அதிக நேர வேலை’ என்ற முறையை அமல்படுத்தியது.