ராஜஸ்தானில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு நான்கு விழுக்காடு மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய அறிவிப்பின்படி மாநிலத்தில் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) 34 விழுக்காடு ஆகவும், டீசல் மீதான வரி 26 விழுக்காடு ஆகவும் உள்ளது.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சுகாதார மற்றும் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மோடி அரசு தனது பட்ஜெட்டில் மாநிலத்திற்கு பொருத்தமான பங்கினை வழங்கவில்லை என்று கூறினார். மத்திய அரசின் வெவ்வேறு திட்டங்கள் காரணமாக மாநிலங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன.