தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குதிரை பேர ஆடியோ விவகாரம்: சஞ்சய் ஜெயின் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோ தொடர்பாக சஞ்சய் ஜெயினை சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர்.

சஞ்சய் ஜெயின் கைது
சஞ்சய் ஜெயின் கைது

By

Published : Jul 19, 2020, 11:45 AM IST

Updated : Jul 19, 2020, 12:58 PM IST

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, சச்சின் வசம் இருந்த துணை முதலமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அக்கட்சி மேலிடம் பறித்தது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்களை பாஜக பக்கம் இழுக்க அவர்களுடன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சஞ்சய் ஜெயின் ஆகியோர் உரையாடிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு மறுப்பு தெரிவித்த கஜேந்திர சிங் ஷெகாவத், ஆடியோவில் உரையாடியது தான் இல்லை என்றும், விசாரணைக்கு தயார் என்றும் கூறியிருந்தார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ஜெயினை சிறப்பு காவல் படையினர் நேற்று (ஜூலை 18) இரவு கைது செய்தனர். அவரை நான்கு நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சிறப்பு காவல் படையினர் கூறுகையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சஞ்சய் ஜெயினுடன் ஆடியோவில் உரையாடிய காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வார்லால் சர்மாவை பிடிக்க முடியவில்லை. இது உரையாடல் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவின் குற்றச்சாட்டுக்கு ஷெகாவத், பன்வார்லால் சர்மா இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இந்த சதித்திட்டம் குறித்து ஷெகாவத், பன்வார்லால் சர்மா, சஞ்சய் ஆகியோர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி புகார் அளித்துள்ளார்" என்றார்.

Last Updated : Jul 19, 2020, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details