ராஜஸ்தானின் சுற்றுலா துறை மேம்பாட்டுக் கழக (ஆர்.டி.டி.சி) ஊழியர்கள் இருவர் பரத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அந்த முடிவுகளில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தவறான முடிவுகளை வெளியிட்டதால், மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாசிடிவாகக் காட்டிய நெகட்டிவ் ரிப்போர்ட் - ராஜஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு!
ஜெய்ப்பூர்: தனது இரண்டு ஊழியரின் கரோனா வைரஸ் எதிர்மறை முடிவுகள் நேர்மறையாகக் காட்டப்பட்டுள்ளதாக பரத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ராஜஸ்தான் சுற்றுலாத்துறை அமைச்சர் விஸ்வேந்திர சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
Coronavirus Rajasthan
இதுகுறித்து ராஜஸ்தான் சுற்றுலாத்துறை அமைச்சர் விஸ்வேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தத் தவறான முடிவுகள் பரத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முழு அலட்சியத்தைக் காட்டுகிறது. மருத்துவமனையின் அலட்சியத்தால், மாவட்டம் முழுவதும் ஒருவிதமான பதற்றமான சூழல் உருவாகியுள்ளது" என பதிவிட்டுள்ளார்.