தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கைத் தொடர்கிறதா ராஜஸ்தான்? - Pandemic

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கைத் தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜாஸ்தான்
ராஜாஸ்தான்

By

Published : Apr 7, 2020, 6:14 PM IST

Updated : Apr 8, 2020, 8:19 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நாடு முழுவதும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை மத்திய அரசு நீட்டிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், பிரதமர் மோடியுடன் நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில் பேசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், ராஜஸ்தானில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படவுள்ளதாகவும், முதற்கட்டமாக, அனைத்து அரசாங்க அலுவலகங்களையும் மாற்று நாள்களில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாவும், குழந்தைகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகிவருகிறது.

இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் 325 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தனிமைப்படுத்தப்பட நபரின் இருப்பிடத்தை ட்ரேக் செய்யும் ஐஐடியின் செல்போன் செயலி!

Last Updated : Apr 8, 2020, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details