ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து நீதிபதிகளை 'மை லார்ட்', 'யுவர் லார்ட்ஷிப்' என்றே வழக்கறிஞர்கள் அழைத்து வந்தனர். இந்த வார்த்தைகள் அடிமைத்தனமாக உள்ளதால் இவற்றை பயன்படுத்த தவிர்க்குமாறு பல நீதிபதிகள் கூறிவந்தனர். இந்நிலையில், ராஜஸ்தான் நீதிமன்றக் கூட்டம் ஜூலை 14ஆம் தேதி நடைபெற்றது.
'மை லார்ட்' என அழைக்காதீங்க..! நீதிபதிகள் அறிவுரை - மை லார்ட்
ஜெய்பூர்: நீதிபதிகளை 'மை லார்ட்' என்றழைக்கும் நடைமுறையை இனி பின்பற்ற வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதில் கலந்து கொண்ட அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'மை லார்ட்', 'யுவர் லார்ட்ஷிப்' என்றழைப்பதைத் தவிர்த்து, இனி 'சார்' என்று அழைத்தால் போதுமானது என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் நூற்றாண்டு கால நடைமுறை உயர் நீதிமன்றம் உடைத்தெறிந்துள்ளது. இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக பழக்கப்பட்டுவந்த வார்த்தைகள் தவிர்ப்பது கடினமான ஒன்றுதான். ஆனால் காலப்போக்கில் 'மை லார்ட்', 'யுவர் லார்ட்ஷிப்' ஆகிய வார்த்தைகள் தவிர்க்கப்படும்" என்றார்.