தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 23, 2020, 7:59 PM IST

Updated : Jul 23, 2020, 9:05 PM IST

ETV Bharat / bharat

'ராஜஸ்தான் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம்' - உச்ச நீதிமன்றம்

ஜெய்ப்பூர்: தகுதிநீக்கத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ராஜஸ்தான் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் ஆகியோர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத காரணத்தால், அதிருப்தி உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்ய கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.

நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தகுதிநீக்கம் செய்வதற்கு முன்பு இவ்விவகாரத்தில் தலையிடுவதற்கு சபாநாயகருக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கு எதிராக சபாநாயகர் ஜோஷி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை இன்று (ஜூலை 23) விசாரித்தது. அப்போது, தகுதிநீக்கத்திற்கு எதிராக முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபாநாயகரின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "உயர் நீதிமன்றத்தால் தகுதிநீக்க நடவடிக்கைகளை நீட்டிக்கக் கோர முடியாது. உயர் நீதிமன்ற வரம்புக்கு கீழ் அது வராது. அரசியலமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணையின் கீழ் இம்மாதிரியான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது. சபாநாயகர் எடுக்கும் தகுதிநீக்க முடிவை மறு சீராய்வு செய்யலாமே தவிர, அதற்கு முன்பான நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க முடியாது" என்ற வாதத்தை முன்வைத்தார்.

இந்த விவகாரம் குறித்த முழுமையான விசாரணை தேவை என்றும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோருவது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர், வழக்கை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா ஸ்பைஸ் ஜெட் விமான சேவை

Last Updated : Jul 23, 2020, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details