தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2020, 11:31 AM IST

ETV Bharat / bharat

வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான்
ராஜஸ்தான்

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்தச் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.

பஞ்சாப் சட்டப்பேரவையில் இந்தச் சட்டங்களுக்கு எதிராக நேற்று (அக். 21) மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜஸ்தானில் இது தொடரும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மழையில் உற்சாகமாக நடனமாடிய கமலா ஹாரிஸ்!

ABOUT THE AUTHOR

...view details