கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்கிடையே, கரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்ட ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கைலாஷ் சந்திரா உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கரோனாவிலிருந்து குணமடைந்த போதிலும் மூச்சுத்திணறல் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.