தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெட்டுக்கிளிகள் விவகாரம்: பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட பிரதமருக்கு கெலாட் கடிதம் - ராஜஸ்தான் வெட்டுக்கிளிகள்

ஜெய்ப்பூர்: வெட்டுக்கிளிகள் தாக்கத்திலிருந்து பயிர்களை காக்கும் விதமாக பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

Rajasthan CM urges PM Modi to coordinate with Pakistan to control locust menace
Rajasthan CM urges PM Modi to coordinate with Pakistan to control locust menace

By

Published : Dec 28, 2019, 4:02 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்கள் பாகிஸ்தான் எல்லையருகே அமைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை வெட்டுக்கிளி தாக்கி அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். இந்தாண்டு மே மாதம் அப்பகுதிக்கு வந்த வெட்டுக்கிளிகள் தொடர்ந்து பெருகி தற்போது பயிரை நாசம் செய்கின்றன.

குளிர்காலமான டிசம்பரில் அதன் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இந்த வெட்டுக்கிளிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்த பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தானில் உள்ள சில மாவட்டங்களில் விவசாயப் பயிர்கள் வெட்டுக்கிளியால் அழிக்கப்பட்டுள்ளன. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வேண்டும் என அவருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகம் இருப்பதாகவும், இதனால் விவசாயப் பயிர்கள் நாசமாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதையும் படிங்க: பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் - அசோக் கெலாட்

ABOUT THE AUTHOR

...view details