தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் - அசோக் கெலாட் - தேசிய குடிமக்கள் பதிவேடு

ஜெய்பூர்: தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் பிரதமர் மோடியும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் தவறாக வழிநடத்துகின்றனர் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Rajasthan CM criticises PM Modi over NRC statement
Rajasthan CM criticises PM Modi over NRC statement

By

Published : Dec 23, 2019, 11:30 PM IST

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் திங்கள்கிழமை (டிச.23) செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்திற்கானது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஆனால் உள் துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுக்க செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் கூறினார்.

ஆக பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடி அனைத்தையும் அறிந்து இவ்வாறு பேசுகிறார் என்றால் அது தீவினையானது. பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மக்கள் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்புகளை வழங்கிவருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: அமித் ஷாவை வரலாற்றை திரும்பி பார்க்க சொல்ல வேண்டும்: ப. சிதம்பரம் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details