ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி மாநிலத்திற்கு வந்துள்ளார். சொந்த பயணமாக வந்துள்ள அவர், புதுச்சேரி லே - பாண்டி என்ற தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அவரை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்து வரவேற்று பூங்கொத்து அளித்தார்.
அவரை தொடர்ந்து புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் அனந்தராமன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.