கடந்த 2017ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், பெஹ்லு கான் என்பவர் பசு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட்டிறைச்சி தடை சட்டம் 5, 8, 9 ஆகிய பிரிவுகளின் கீழ், அவர் மீதும் அவரது மகன்கள் இஸ்ரத், அரிஃப் ஆகியோர் மீதும் பசு கடத்தியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பெஹ்லு கான் வழக்கில் நீதி நிலைநாட்டப்படுமா? - Rajasthan govt Acts Against Accused
ஜெய்பூர்: பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு எதிராக ராஜஸ்தான் அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
![பெஹ்லு கான் வழக்கில் நீதி நிலைநாட்டப்படுமா?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4795950-thumbnail-3x2-pehlu.jpg)
போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரையும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து இந்த வழக்கை ராஜஸ்தான் அரசு விசாரித்துவந்தது. அப்போது, முதற்கட்ட விசாரணையில் பல குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு எதிராக ராஜஸ்தான் அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஹரியானா மாநிலம் மேவாத் நகரைச் சேர்ந்த பெஹ்லு கான், ரமலான் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை வாங்கச் சென்றார். அப்போது பசுக்காவலர்கள், அவரை பசு கடத்தியாகக் கூறி கட்டையால் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.