இது குறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா கூறுகையில், "இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட ரேபிட் கிட் பரிசோதனை மூலம் 90 விழுக்காடு கரோனா பெருந்தொற்றினை விரைவில் கண்டறியலாம் என எண்ணினோம். ஆனால் இந்தப் பரிசோதனை 5.4 விழுக்காடு மட்டுமே சரியான முடிவுகளை அளித்துள்ளது. எனவே, இந்த ரேபிட் கிட்களால் எவ்வித பயனும் இல்லை" எனக் கூறினார்.
ரேபிட் கிட்களின் முடிவுகள் குறித்து ஆராய அரசு மருத்துவமனை ஒன்றில், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது என்று சொன்ன அவர், அவர்களின் ஆராய்ச்சி முடிவில் 5.4 விழுக்காடு மட்டுமே துல்லியமான முடிவுகளை அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழுவின் ஆலோசனைப்படி, மாநிலத்தில் ரேபிட் கிட் கொண்டு மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதை நிறுத்தியுள்ளதாகவும், இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்குப் புகாரளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.