மாநிலங்களவை எம்.பி.யும் ராஜஸ்தான் பாஜக மாநிலத் தலைவருமான மதன்லால் சைனிக்கு (75) கடந்த சில நாட்களுக்கு முன் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்ததால் கடந்த சனிக்கிழமையன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மாலை 7 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட பல பாஜக தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.