ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தின் சாகாபாத் பகுதியில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி, ஆகஸ்ட் 11ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 19 வயது இளைஞர் கைது! - பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Young man arrested for sexual harassment
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமியைத் தாக்கி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.