ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுரு பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 563ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, அப்பகுதி முழுவதும் சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் கரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பாகாடியா மருத்துவமனை மருத்துவர் திலீப் சோனி கூறுகையில், "ஹரித்வாரிலிருந்து திரும்பிய தந்தை, மகன் ஆகிய இருவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கும் தொற்று உறுதியானது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அவர்களது குடும்பத்தினர் உள்பட 86 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.