தெலங்கானா மாநிலம் மங்கல்ஹாட் காவல் நிலையம் ரவுடி பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், கோஷமஹால் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் பெயர் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக எம்எல்ஏ ராஜா சிங் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'எனது காட்சிக்காரர் ஒருவர் காவல் நிலையம் சென்றபோது, எனது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பது குறித்து எனக்குத் தெரிவித்தார். இது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. இரண்டு முறை இந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்து மக்களுக்கு சேவை செய்துள்ளேன். நான் சட்டப்பேரவை உறுப்பினரா அல்லது ரவுடியா என குழப்பம் எழுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்களின் பெயர் ரவுடி பட்டியலில் இருந்துள்ளது, என்றார். மேலும், காவல்துறையினர் அவர்களின் பெயர்களை வெளியிடுவார்களா? அவர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்துமா? என கேள்வி ஏழுப்பியுள்ளார்.