இந்தியாவின் வறண்ட மாநிலமான ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மயங் பிரதாப் சிங் (Mayank Pratap Singh). இவர்தான் அந்த அசாத்திய சாதனைக்கு சொந்தக்காரர். 21 வயது பூர்த்தியடைந்த நிலையில், நாட்டின் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு நீதிபதி தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். அவரை நமது ஈடிவி பாரத் செய்தியாளர் நேரடியாக சந்தித்து பேட்டி கண்டார். அப்போது பிரதாப் சிங் கூறியதாவது, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் 2014ஆம் ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். இந்த ஆண்டுதான் எனது சட்டப்படிப்பு நிறைவடைந்தது. நீதிபதி தேர்வில் முதல் முறையிலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக எனது ஆசிரியர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனக்கு ஆதரவளித்தோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாயத்தில் நீதிபதிகளுக்கு கிடைக்கும் மரியாதை, சமூக பொறுப்பு ஆகியவற்றால் நான் நீதித்துறை நோக்கி ஈர்க்கப்பட்டேன் என்றார்.