தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வேலைக் கொடு'... இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸின் புதிய பரப்புரை!

டெல்லி: இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி, அதற்கான பிரத்யேக பரப்புரையை தொடங்கியுள்ளது.

congress
congress

By

Published : Aug 10, 2020, 11:01 AM IST

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தற்போது அதிகரித்துவரும் சூழ்நிலைக்கு மத்திய அரசுதான் காரணம் என பாஜக அரசை குற்றஞ்சாட்டிவரும் காங்கிரஸ் கட்சி, வேலை இல்லாதவர்களுக்கு ஆதரவாக 'வேலைக் கொடு' (Rozgar Do) என்னும் பரப்புரையை ஆரம்பித்திருக்கிறது.

உலகளவில் வேலையில்லாத இளைஞர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, தற்போதைய சூழ்நிலையில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் அவசியமானதாக உள்ளதால், காங்கிரஸ் இந்தப் பரப்புரையை தொடங்கியதாக அக்கட்சியின் இளைஞரணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "பாஜக 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தால் இரண்டு கோடி பேருக்கு வேலை உறுதி எனக் கூறினார்கள்.

அப்படி நடந்திருந்தால், கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியில் 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 2020ஆம் ஆண்டு நிலவரப்படி 12 கோடி இந்தியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்." எனக் கூறினார்.

வேலை இழப்புக்கு முக்கிய காரணங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு, தவறான முறையில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது, திட்டமில்லாம் அறிவிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு ஆகியவை காரணம் என பாஜக மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகிறது.

இதையும் படிங்க:காஷ்மீரில் ஆளுநர் மாற்றம்... தொடங்கியது அரசியல் நாடகம்!

ABOUT THE AUTHOR

...view details