கடந்த மே மாதம் 8ஆம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா தெரபி சிகிச்சையின் செயல்திறனை மதிப்பிட தேசிய நெறிமுறைகள் குழுவிடம் (National Ethics Committee) ஒப்புதலைப் பெற்றது.
முன்னதாக, பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்கும் முறை, சில இடங்களில் பின்பற்றப்பட்டது. இது, கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் ரத்த அணுக்களை எடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் முறையாகும்.