தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்! - வானிலை ஆய்வு மையம் பிராந்திய பிரிவு இயக்குநர் சி.எஸ். பாட்டீல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பல மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கனமழை தொடரும்
கனமழை தொடரும்

By

Published : Oct 22, 2020, 6:24 AM IST

கர்நாடக மாநிலத்தில் வடக்கு உட்பகுதிகளில் எல்லா இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாநிலங்களிலும், கடலோரப்பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் பிராந்திய பிரிவு இயக்குநர் சி.எஸ். பாட்டீல் தெரிவித்துள்ளார். அதேசமயம் ரைச்சூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு 7 செ.மீ, சிந்தமணி 4 செ.மீ, ஷிராஹட்டி 3 செ.மீ பெய்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்யும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 23ஆம் தேதிவரை நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தெற்கு மாவட்டங்களில் வருகின்ற அக். 24 ஆம் தேதிவரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஷிமோகா, தார்வாட், ஹவேரி, கடாக், பாகல்கோட், ரைச்சூர், டேவனகேரே, பெல்லாரி, சித்ரதுர்கா, தும்கூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேசமயம் ஏற்கனவே பெய்தமழையில் ஆர்.ஆர்.நகர் , சாந்திநகர், ஜெயநகர், கோரமங்களா, மெஜஸ்டிக், காந்திநகர், யஷ்வந்த்பூர், பத்ரப்பா தளவமைப்பு சாலைகள் போன்ற இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், உத்தர கன்னடம், உடுப்பி மற்றும் தட்சின் கன்னட மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக் .24ஆம் தேதியிலிருந்து மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி... பழைய கார்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

ABOUT THE AUTHOR

...view details