ஹைதராபாத்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. செவ்வாய்க்கிழமை (அக்.13) தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக ஹைதராபாத் நகர் வெள்ளத்தில் தத்தளித்தது.
சாலையெங்கிலும் மழை நீர், ஆற்று நீர் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி நத்தை போல் ஊர்ந்து கொண்டே சென்றனர். பல்வேறு இடங்களில் பெருமழை காரணமாக நகர்ப்பகுதி துண்டிக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, யாத்கிரி- போங்கீர் மாவட்டத்தில் உள்ள வெர்கட் பல்லே பகுதியில் 243.8 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து மெட்சால் மல்காஹ்கிரி மாவட்டத்தில் உள்ள சிங்கபூர் நகரில் 210.8 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது.