புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்முதலாக மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.
மழை நீர் சேகரிப்பு கட்டாயம்... இல்லையெனில் வீடு கட்ட அனுமதி இல்லை! - புதுச்சேரி அரசு கெடுபிடி - புதுச்சேரி
புதுச்சேரி: "புதிதாக வீடு கட்டுபவர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இல்லையெனில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படமாட்டாது" என்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
puducherry CM
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "மழைநீர் சேமிக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இது போன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக வீடு கட்டுபவர்கள் இனிவரும் காலங்களில் கட்டாய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் வீடு கட்ட அனுமதி தரப்பட மாட்டாது" என்றார்.