இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.
இதில் பேசிய கோயல், “சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா முக்கிய பங்குவருகிறது. இதற்காக பல நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துவருகிறது. அடுத்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியன் ரயில்வே நூறு விழுக்காடு மின்மயமாக்கப்படும்.
இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பசுமை ரயில்வே கொண்ட நாடு என இந்தியர்கள் அனைவரும் பெருமையடையலாம்” என்றார். மேலும் பேசிய அவர், 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை 18 ஆயிரத்து 605 கிலோமீட்டருக்கு மின்மயமாக்கல் பணிகள் செய்யப்பட்டுள்ளன.