கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைராஸால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.