இது குறித்து மத்திய அரசின் தலைமைக் கணக்கர், இந்திய ரயில்வே நிதி நிலை அறிக்கையை இன்று (டிசம்பர் 2) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ' கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரயில்வே உதிரி வருவாய் சரிவைச் சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2016-17ஆம் ஆண்டில் ரூ.4,913 கோடியாக இருந்த வருவாய் 66.10 விழுக்காடு சரிவைக் கண்டு, ரூ.1,665.61 என சரிந்துள்ளது.
ரயில்வே உதிரி வருவாய் பயணிகளின் பயன்பாட்டுச் சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், தற்போது இந்திய ரயில்வே, அதன் பயணிகள் சேவைகள் மற்றும் பிற பயிற்சி சேவைகளின் செயல்பாட்டு செலவைப் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. பயணிகள் மற்றும் பிற பயிற்சி சேவைகளின் செயல்பாட்டில், ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய சரக்கு போக்குவரத்தின் லாபத்தில், கிட்டத்தட்ட 95 விழுக்காடு பயன்படுத்தப்பட்டது.