தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'குடிபெயர்ந்தோருக்காக இதுவரை 1,034 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன' - Piyush Goyal tweet

டெல்லி: குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக மே 1ஆம் தேதி முதல் இதுவரை 1,034 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

Railways operated 1,034 Shramik trains since May 1: Goyal
Railways operated 1,034 Shramik trains since May 1Railways operated 1,034 Shramik trains since May 1: Goyal

By

Published : May 16, 2020, 3:58 PM IST

நாட்டில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் சொந்த மாநிலத்தை விட்டு வெவ்வெறு மாநிலங்களில் பணிபுரிந்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, வருமானமில்லாததால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறு சாலைகளில் நடந்துசென்ற சிலர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இச்சூழலில், குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் விதமாக மத்திய அரசு கடந்த மே 1ஆம் தேதி சிறப்பு ரயில் வசதியை ஏற்பாடு செய்தது.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்தனது ட்விட்டர் பதிவில் அவர், "மே 1ஆம் தேதி முதல் இதுவரை இயக்கப்பட்ட 1,034 சிறப்பு ரயில்களில் கிட்டத்தட்ட 12 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 106 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு 80 விழுக்காடு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன" எனப் பதிவிட்டுள்ளார்.


இதையும் படிங்க:
'குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்' - உள்துறை அமைச்சக
ம்

ABOUT THE AUTHOR

...view details