நடந்து முடிந்து மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு சார்பாக மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களையும் எதிர்த்து எதிர்க்கட்சிகள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த வேளாண் மசோதாக்களைக் கைவிடும்படி பஞ்சாப்பில் விவசாயிகள் சார்பாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் முன்னெடுத்து வரும் ரயில் மறியல் போராட்டத்தால் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் சரக்கு ரயில்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து வெளியேற முடியாத சூழல் நிலவியுள்ளது.
இதனால் பஞ்சாப் மாநிலத்தில் சரக்கு ரயில் சேவைகளை அனுப்ப வேண்டாம் என ரயில்வே துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் உரம், நிலக்கரி, உணவு பொருள்கள், மற்ற அத்தியாவசியப் பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் என தெரிகிறது.