கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் மே31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுபோக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டுவந்தனர். இந்நிலையில், ஊரடங்கால் சிக்கி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது அந்த ரயில்களின் எண்ணிக்கை மத்திய ரயில்வே அமைச்சகம் இரட்டிப்பாகி உள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
ரயில் நிலையத்தில் உணவகம் திறக்க அனுமதி! - மத்திய ரயில்வே அமைச்சகம்
டெல்லி: நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கியுள்ள நிலையில், ரயில் நிலையத்தில் உணவகங்கள், புத்தக நிலையங்கள் திறக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில் "ரயில்வே நிலையங்களில் உணவகங்களை திறப்பது குறித்து மண்டல ரயில்வே வாரியம், தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தில் புத்தகக் கடைகள் மற்றும் மருந்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் வழிகாட்டுதல்களின்படி, உணவகத்தில் உணவு உண்ண அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே வாங்கி செல்லலாம்" என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டுக்கு ரயில் சேவை இல்லை - புலம்பெயர்ந்தோர் ஏமாற்றம்