தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நம் ஒருநாள் சம்பளத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் - இந்தியன் ரயில்வே

டெல்லி: கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட 21 நாள் தேசிய அளவு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியன் ரயில்வே அதன் ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.

Railways appeals 13.5 lakh staff to donate one-day's pay
Railways appeals 13.5 lakh staff to donate one-day's pay

By

Published : Mar 27, 2020, 11:28 PM IST

இதுகுறித்து இந்தியன் ரயில்வே அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், உலக சுகாதார மையத்தால் பெருந்தொற்று என அறிவிக்கப்பட்ட கோவிட் 19 பரவலால் நமது தேசம் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இது ஒரு எதிர்பாராத மோசமான பேரழிவு ஆகும். இந்த சூழலில் நாம் அரசாங்கத்துக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக நமது ஒருநாள் சம்பளத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும். அடிப்படை ஊதியம் குறைவாக உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Railways appeals 13.5 lakh staff to donate one-day's pay

ABOUT THE AUTHOR

...view details