மக்களவையில் கேள்வி எண் ஆயிரத்து 731இல் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ரயில்வே பிங்க் புத்தகத்தில், 2019-20ஆம் ஆண்டு வரையில் ஒப்புதல் பெற்று பெருமளவில் பணி தொடங்கப்பட்ட திட்டங்கள், 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டு வெவ்வேறு இடங்களிலான பணிகளை இணைக்கும் குடைத் திட்டங்கள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் பியூஸ் கோயல்,இந்த நிதியாண்டு இறுதிவரை புதிய திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் அவசரப் பணிகள் மட்டும் நிறுத்தப்படாது என்று பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சு.வெங்கடேசன், "ரயில்வே திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வருந்தத்தக்க முடிவு. ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் நிறுத்தப்படுவது ரயில்வே மேம்பாட்டை மட்டுமின்றி, வேலை உருவாக்கத்தையும் பாதிக்கும். இந்தியா, மிகப்பெரும் வேலையிழப்பு, வேலையின்மை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.