உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இரண்டு நபர்கள் வரிசையில் நின்று பயணச்சீட்டு பெறாமல் பொதுமக்களிடையே தகராறு செய்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் அலுவலர் இருவரையும் வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். இதனிடையே காவலருக்கும் அந்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, அவர்கள் இருவரும் சேர்ந்து பணியில் இருந்த காவலரை பொதுமக்கள் முன்பு சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்து அடி வாங்கும் காவலரை பொதுமக்கள் மீட்டனர்.